அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை – நிதி அமைச்சு தெரிவிப்பு!

Friday, March 24th, 2023

மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக நிதி அமைச்சின் கீழ் நிறுவன மறுசீரமைப்பு அலகு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் லிமிடெட், ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி மற்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் அரச நிறுவனங்களில் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகைய சீர்திருத்தங்கள் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

எவருக்கும் மானிய விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவது இல்லை - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர...
அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் - அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை...