அரசியல் நோக்கம் கொண்ட குழுக்கள் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகளை குழப்புவதற்கு முயற்சி – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றச்சாட்டு!
Monday, August 30th, 2021
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிற்கு குழப்பம் விளைவிக்கும் முயற்சியில் நாடளாவிய ரீதியில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன என குற்றம்சாட்டியுள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இது குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் ஹிக்கடுவையில் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் இதுவே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் உணர்வுகளை திசைதிருப்பிவிடுவதற்காக ஐக்கியதேசிய கட்சி ஜேவிபி தலைவர்கள் திட்டமிட்டு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என அரச புலனாய்வு பிரிவினர் தனக்கு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டையிலும் இந்த குழுக்கள் ஹிக்கடுவை போன்று குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன எனவும் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அம்பாந்தோட்டையில் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக செயற்படுகின்றன அதனை குழப்புவதற்கு சில சக்திகள் முயல்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அரசியல்நோக்கம் கொண்ட குழுக்கள் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகளை குழப்ப முயல்கின்றன, என தெரிவித்துள்ள அமைச்சர் ஐக்கியதேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரே ஹிக்கடுவையில் குழப்பததை ஏற்படுத்த முயன்றார் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


