ஜனவரி 8 முதல் 14 வரை தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரம்!

Wednesday, December 21st, 2016

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 8ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தை ‘தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரமாக’ பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்படுவது,

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த ‘தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் அனுஷ்டிக்கப்படவுள்ள குறித்த வாரத்துடன் இணைந்ததாக நாடு தழுவிய ரீதியில் அனைத்து பாடசாலைகள், ஊடகங்கள், அரச மற்றும் தனியார் நிர்வனங்களை மையமாகக்கொண்டு தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் என கூறப்படுகின்றது. மேலும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

President-Maithripala-Sirisena

Related posts: