அரசியல் தலையீடுகள் இன்றி திறந்த போட்டியின் மூலம் உதவி சுங்க அத்தியட்சகர்கள் சுங்க பரிசோதகர்களை இணைக்க திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, October 2nd, 2023

நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வரி விலக்குகளில் சிறு குறைப்புகளைச் செயல்படுத்துதல் மற்றும் வரி ஏய்ப்பைத் தீவிரமாக எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தால் பரிந்துரைக்கப்பட்ட, பல்வேறு நடவடிக்கைகளின் அவசியத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அவர், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், உலகிலேயே மிகக் குறைந்த வருமானத்தைப் பெற்ற நாடு இலங்கை என்ற ஆபத்தான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 50% அதிகரித்துள்ள போதிலும், அது போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி திறந்த போட்டியின் மூலம் 138 உதவி சுங்க அத்தியட்சகர்களையும் 45 சுங்க பரிசோதகர்களையும் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: