அரசியல் சாசனம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் – மஹிந்த அமரவீர!

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்த கேள்விக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை எனவும் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் இது குறித்த தெளிவான நிலைப்பாட்டை வெளியிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பொதுவான நிலைப்பாட்டை விரைவில் வெளியிடுவார் என மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யூன் 29 ஆம் திகதி Construction Expo கண்காட்சி ஆரம்பம்!
பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கே பாதீட்டில் முன்னுரிமை – பசில் ராஜபக்ச!
சிரேஷ்ட பிரஜைகளுடன் ஒப்பிடும்போது சிறுவர் தொற்றுகள் குறைவு - சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயக...
|
|