அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது ; ஜனாதிபதி மைத்திரி!
 Monday, December 17th, 2018
        
                    Monday, December 17th, 2018
            தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்கப்பட வேண்டும். அந்தவகையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பத்தில் சிக்கல் நிலை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குற்றமிழைத்த விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்களில் பலர் வெளிநாடுகளில் வாழுகின்றனர். நாட்டுக்காக போராடிய இராணுவத்தினர் மாத்திரம் ஏன் குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்?
சிறையில் உள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுவிப்பதாயின், குற்றச்சாட்டுகளின் சிறையிலுள்ள இராணுவத்தினரும் அவ்வாறே விடுவிக்க வேண்டும்.
இராணுவத்தினரை விடுவித்தால் மாத்திரமே தமிழ் கைதிகளை விடுவிக்க அனுமதிப்பேன் என ஜனாதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        