அரசியல் உரிமைத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாம் தொடர்ந்தும் செயற்படுவோம் – சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவிப்பு.
Thursday, December 29th, 2016
ஆயுதப் போராட்ட காலத்திலிருந்து தமிழர் உரிமைப் போராட்டத்தில் நாம் பங்காளிகளாக இருந்து வருவதால் எமது மக்களை நட்டாற்றில் விட்டுச் செல்ல விரும்பவில்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் (ஜீவன்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் கடந்த காலங்களில் எமது கட்சியினுடைய செயற்பாடுகள் குறித்த விடயத்தில் மக்களாகிய நீங்கள் அதிருப்தி கொண்டிருந்தால் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் எனவும் மக்களாகிய நீங்கள் வாய்மூடி மௌனமாக இருக்காது உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் பட்சத்திலேயே நாம் எமது கட்சியின் செயற்பாடுகளை மேலும் செழுமைப்படுத்தி நேர்த்தியாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

போராட்ட காலத்தின் ஆரம்பம் தொடக்கம் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் செயற்பட்டு வருவதால் எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் எமக்கும் பங்குள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் அரசியல் ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் தீர்வைப் பெற்றுக்கொள்ளாத சூழலில் நாம் எமது மக்களை நட்டாற்றில் விட்டுச் செல்வது போல் விட்டுச் செல்ல விரும்பவில்லை. எமது கட்சியும் கட்சியுடனும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனும் இணைந்து தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும் மக்களின் வாழ்வியல் சார்ந்த விடயங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் நாம் என்றும் தயாராகவே உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


