அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் அங்கீகாரத்திற்கா நாளை அமைச்சரவையில்!

Sunday, May 22nd, 2022

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நாளை (23) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணையங்களுடன் கூடுதலாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் கொள்முதல் ஆணைக்குழு ஆகியவை சுயாதீன ஆணைக்குழுவாக மாற்றப்படவுள்ளன.

தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக ஆக்குவதற்கு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்ததின் நோக்கம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் புதிய திருத்தம் முன்மொழிகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: