அரசின் பங்காளியாக செயற்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தமிழ் மக்களிற்கு எதனையும் பெற்ருக்கொடுக்கவில்லை – . யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச !

Wednesday, July 11th, 2018

தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அரசின் பங்காளிகளாகவே செயற்படுகின்றனர் என நாடாலுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இன்றயதினம் யாழ் வருகைதந்த நாமல் றாயபக்ச யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே இதனை தெரிவித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் எந்தொரு கட்டத்திலும் அரசாங்கத்ததை எதிர்த்து செயற்படவில்லை. தமிழ் மக்களிற்கு எதிரான பாதகமான விடையங்களை இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கின்றனர்.

திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வேலைவாய்ப்பினை பெற்ருத்தருமாறு இளைஞன் ஒருவன் கேட்டபோது வேலைவாய்ப்பினை பெறுவதற்கு அரசாங்கத்துடன் நான் பேசமாட்டேன் என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் அரசியல் அமைப்பு தொடர்பாகவே பேசுவேன் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறு தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சம்பந்தர் தமிழ் மக்களிற்கு உறுதியளித்ததுபோல் இந்த அரசாங்கத்திடமிருந்து எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு வடமாகாண சபை எந்த்வொரு அபிவிருத்தி முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை. கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதே வடக்கின் வசந்த்ததின் கீழ் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இந்த மைத்திரி ரணில் கூட்டு அரசாங்கமோ அரசின் பங்காளிகளாக இருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரோ வடமாகாணசபையோ எந்தொரு அபிவிருத்தியையும் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளவில்லை எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Related posts: