அரசாங்க ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய 2019!
Wednesday, January 2nd, 2019
இந்த ஆண்டு விடுமுறைகள் குறைந்த ஆண்டாக காணப்படுகின்றது.
23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வாரஇறுதி நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டு சனி, ஞாயிறு தினங்களில் வருவதுடன், வெசாக், பௌர்ணமி விடுமுறையும் சனி, ஞாயிறு தினங்களில் வருகின்றன.
பௌர்ணமி தினங்கள், தீபாவளி பண்டிகை, நபிகளின் பிறந்த நாள் உள்ளிட்ட சில விடுமுறைகளும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளது.
20 வர்த்தக விடுமுறைகளில் எட்டு விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டில் 26 பொது விடுமுறை நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்களில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாலபே தனியார் கல்லூரி விவகாரம்: தடைசெய்யக் கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்கள் தொடர் போராட்டம்!
ஏற்றுமதியினை அதிகரிக்க விஷேட செயற்பாடு தேவை - ஜனாதிபதி!
சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெ...
|
|
|


