அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு!
Saturday, May 28th, 2022
அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சுயாதீன தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த நிரோஷன் பிரேமரத்ன செய்தி தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் செயல்பட்டார்.
இதேவேளை, சிறந்த செய்தி வாசிப்பிற்கான விருதையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்ப்பாணத்தில் 1753 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!
இலங்கைக்கு அமெரிக்காவில் சுங்கத் தீர்வை!
முன்கூட்டிய அறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு - அரசாங்க மருத்துவ அதிகாரிகள்!
|
|
|


