அமைதிப் படையினருக்கு இந்திய துணைத்தூதுவர் அஞ்சலி!

Wednesday, August 17th, 2016

இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக  பலாலி படைத்தளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அமைதிபடை நினைவுத் தூபிக்கு யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஏ.நடராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பலாலியில் அமைந்துள்ள குறித்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு கடந்த திங்கட்கிழமை (15) அஞ்சலி செலுத்தியுள்ளார்..

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் துணைத்தூதுவர் மற்றும் இராணுவ வீரர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போது, ஓப்ரேசன் பவன் 10ஆவது பரா கொமாண்டோக்கள் மற்றும் 13ஆவது சீக்கிய ஒளி காலாட்படையினைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், ஹெலிகொப்டரில் இருந்து தரையிறங்கும் போது  புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: