அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

Friday, August 26th, 2016

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரிசி இறக்குமதி தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 98,375 மெட்ரிக் தொன் பொன்னி அரிசி, நீண்ட காலமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் குறித்த அரிசியை விற்பனை செய்துள்ளது. நிதிஅமைச்சு மற்றும் திறைசேரியின் அனுமதியுடன்  ச.தொ.சவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இவ்விற்பனையில் சுமார் ரூபா 500 கோடி நஷ்டம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக, ச.தொ.சவுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், வர்த்தக வாணிப அமைச்சர் றிஷாத் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: