அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பயனாளர்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!
Wednesday, December 29th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கமைவாக யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள் ரீதியாக ரெிவு செய்ய்பட்ட ஒரு தொகுதி பயனாளர்களுக்கான உதவித் திட்டங்கள் குறித்த பிரதேசங்களின் துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச பொறுப்பாளர்களால் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளர்களுக்கான உதவித் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீ ரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அம்பன் பிங்பொங், சிவனொளி விளையாட்டுக்கழகம், செம்பியன்பற்று வடக்கு சென்.பிலிப்நேரிஸ், தனிப்பனை மடுமாதா, செம்பியன்பற்று தெற்கு செம்பியன் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கு விளையாட்டு உபகரணங்களும் மருதங்கேணி தெற்கு ஸ்ரீமுருகன் விளையாட்டுக் கழகத்திற்கு மைதானத்தை புனரமைப்பதற்கான காசோலையும் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


