அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி : அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!

Friday, May 14th, 2021

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீட்டுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காசோலைகள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களின் நலன்கருதி கறித்த இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளவுள்ள ஒரு சில விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வாக நேற்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தெவானந்தாவின் சார்பில் கட்சியின் வலிகாமம் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் ஙங்கரன் இராமநாதனால் வழங்கிவைக்கப்பட்டிரந்தது.

முன்பதாக கடந்த வருடம் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் தமது பயிர்களின் அழிவுக்கான இழப்பீடுகளை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்ட குறித்த விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த விவசாயிகளின் பயிரழிவுகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிரழிவுக்கான இழப்பீட்டை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தருவதாக உறுதியளித்திருந்தர்.

இதனடிப்படையில் குறித்த பயிரழிவுக்கான இழப்பீடு கோரி அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் அதற்கான அனுமதியை ஜனாதிபதி கொட்டபய ராஜபக்ச வழங்கியிரந்த நிலையில் தற்போது குறித்த இழப்ப+டுகள் வழங்கிவைக்கப்பட்டள்ளன.

இதனடிப்படையில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 155 வாழைப் பயர்ச் செய்கயாளர்களுக்கு சுமார் 25.5 மில்லியன் ரூபாவும் , 47 பப்பாசி செய்கையாளர்களுக்கு தலா 3 இலட்சம ரூபா வீதமும்  இழப்பீடு வழங்க அனுமதி கிடைத்திருந்தது.

இதில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆயிரத்து 471 விவசாயிகளுக்கு குறித்த இழப்பீடு வழங்கப்பட உள்ள நிலையில் அதன் ஆரம்ப கட்டமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் இராமநாதன் வழங்கிவைத்திருந்தார்.

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சுகாதார நடைமுறைகள் இறுக்மடைந்துள்ளமையால் மக்களின் பாதுகாப்புக் கருதி ஏனைய விவசாயிகளுக்கான இழப்பீடுகள் அவர்களது வங்கி கணக்கில் வைப்பிலிடப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐங்கரன் இராமநானத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமது பயிரழிவுக்கான இழப்பீட்டை பெற்றுத்தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாதிக்கப்பட்ட குறித்த விவசாயிகள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: