அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினாலேயே வடக்கில் சமுர்த்தி வங்கிகள் உருவாக்கப்பட்டன – சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினாலேயே சமுர்த்தி வங்கிகள் உருவாக்கப்பட்டன என்று தெரிவித்துள்ள சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ தற்போது அந்த வங்கிகள் கணனி மயப்படுத்துகின்ற செயற்பாடுகளிலும் கடற்றொழில் அமைச்சரின் பங்களிப்பு காத்திரமானதாக இருந்துள்ளது என தெரிவித்துள்ளார்
கண்டாவளை பிரதேச சமுர்த்தி வங்கிக்கான கணனிச் செயற்பாடுகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் கடற்றொழி்ல் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார். இந்நிகழ்ல் உரையாற்றுகையிலேயே சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுககையில் – கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தற்போது சிறப்பாக முறையில் சமுர்த்தி வங்கிகள் வறிய மக்களுக்கான உதவித்திட்டங்களை முன்னெடுத்தவருகின்றது.
இவ்வாறு அந்த வங்கிகள் தமது சேவையை மேற்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வகிபாகம் அதிகளவில் இருந்துவருகின்றது. அதேபோல சமுர்த்தி உருவாக்கப்பட்ட காலத்தில் அதை வடக்கிற்கு கொண்டுவருவதிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்களிப்பே முழுமையாக இருந்துள்ளது. அவரது இந்த தூரசோக்கம் கொண்ட சிந்தனையால் இன்று வடபகுதியின் ஏராளனமான மக்கள் வறுமையிலிருந்து மீண்டெழுந்தவருவதை அவதானிக்க முடியின்றது..
அந்தவகையில் இன்று குறித்த சமுர்த்தி வங்கிகள் நவீனமயப்படுத்தப்பட்டு கணனி மயப்படுத்தப்பட்டள்ளன எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|