அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவான பருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் குடாநாட்டின் நீர் நிலைகளில் 15 இலட்சம் இரால் குஞ்சுகள் விடப்பட்டன!

பருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடுக்கப்படும் கடல் உயிரின அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக தொண்டமனாறு, அவரங்கால் உப்பாறு, வல்லை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் 15 இலட்சம் இரால் குஞ்சுகள் விடப்பட்டன.
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த திட்டம் வடக்கின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக இன்று (07.02.2020) வல்லை, தொண்டமனாறு மற்றும் ஆவரங்கால் உப்பாறு ஏரிகளில் அமைச்சரின் பிரதிநிதியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தலைமையில் விடப்பட்டன.
இன்றையதினம் விடப்பட்ட இரால் குஞ்சுகள் இன்னும் மூன்று மாதத்தில் சராசரியாக ஒரு இறால் 40கிராம் எடை வரையில் வளர்ந்து இப்பிரதேசத்தில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஏறத்தாழ 30 கோடி வருமானமாக ஈட்டிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது கடற்றொழில் நீரியல் வள மூல அமைச்சின் யாழ் மாவட்ட அதிகாரி சுதாகரன் உள்ளிட்ட சில அதிகாரிகளுடன் கட்சியின் பிரதேச மற்றும் நகரசபை உறுப்பினர்கள் குறித்த பிரதேசங்களின் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|