அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
Wednesday, June 1st, 2016
சுற்றுலா, காணி மற்றும் கிறிஸ்தவ விவகாரத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இந்த முறைப்பாட்டை தெரிவித்துள்ளது. அண்மையில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பாகவே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை மக்கள் தமது தொழிலின் தன்மைக்கு ஏற்ற வகையிலேயே மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என கலெவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி!
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும்!
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - டெல்லியின் நிலைப்பாடு இதுதா...
|
|
|


