அமைச்சர்கள் வெளிநாடு செல்லத் தடை உத்தரவு!

மக்களின் கோரிக்கைகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அமைச்சர்கள் அனைவரினதும் வெளிநாட்டு பயணங்களை ஒரு மாத காலத்திற்கு இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற குழுநிலை சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் வற் வரி அதிகரிப்பிற்கு எதிரான ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருவதோடு பல கோரிக்கைகளையும் மக்கள் முன்வைத்துவருகின்றனர். குறித்த விடயங்கள்தொடர்பிலான தெளிவினை மக்களுக்கு வழங்க வேண்டியது அமைச்சர்களின் கடமையாகும்.
அதனால் அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை தவிர்த்து மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கான தெளிவினை பெற்றுத்தர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
இன்று முதல் விசேட தொடருந்துச் சேவைகள்!
ஊழல் மோசடி ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அமைச்சரவை அனுமதி - அமைச்சர் உதய கம்மன்பில ...
நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரம் வீண் விரயமாக்கப்படுகின்றது - ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பி...
|
|