அமைச்சர்கள் எவருக்கும் சம்பளம் வழங்கப்பட மாட்டாது – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு!

புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என ரணில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் அலுவலக செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக ரணில் முன்னதாக அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
காணொளி தொழில்நுட்பத்தினூடாகஉறவினர்களை சந்திக்க சிறைக் கைதிகளுக்கு சந்தர்ப்பம் - சிறைச்சாலைகள் திணைக...
ஜூலை 3 வரை நாளாந்தம் 3 மணி நேர மின்வெட்டு – அனுமதி கொடுத்தது பொது பயன்பாடுகள் ஆணைக்குழு !
வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர் - தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின்...
|
|