அமைச்சர்கள் எம்.பிக்கள் வெளிநாடு செல்லத்தடை!

Wednesday, November 9th, 2016

ஆளும் கட்சி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மாத காலத்திற்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை  10ம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.; 10ம் திகதி வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஏதேனும் ஒர் காரணத்திற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்த வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ள வேண்டுமாயின் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அது குறித்து ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகத்திற்கு அறிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலம் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும், அமர்வுகள் நடைபெறும் முழுக் காலப் பகுதியிலும் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

17-1395034866-malaysian-airlines-mh-370-1-600

Related posts:

தவறான கருத்துக்களைப் பரப்பி எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்...
2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 70 சதவீதமாக அதிகரிக்கும் - அமைச்சர் மஹிந்த அமரவீர நம்ப...
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு - சுகாதார அமைச்சு தெரிவிப்பு...