புதிய கல்வி முறை உருவாக்கப் பணிக்காக தேசிய கல்வி நிறுவகத்துடன் 150 நிபுணத்துவ ஆசிரியர்கள் இணைப்பு!

Thursday, July 29th, 2021

21ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொருத்தமான நிபுணத்துவத்துடன் கூடிய மாணவர் பரம்பரை ஒன்றினை நாட்டில் உருவாக்குவதற்கு ஏற்றதான கல்வி முறைமை ஒன்றை உருவாக்குவதற்காக கல்வி மறுசீரமைப்பு ஒன்றினை மேற்கொள்வதற்குத் தேசிய கல்வி நிறுவகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த மறுசீரமைப்பின் மூலம் – கற்பித்தல் மூலோபாயங்களில் சிறப்பான மாற்றங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 1, 2, 6, 8 மற்றும் 10 ஆம் தரங்களுக்காக 2023 ஆம் ஆண்டிலும்; 3, 4, 5, 7 மற்றும் 11 ஆம் தரங்களுக்காக 2024 ஆண்டிலும் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறித்த பணிகளுக்காகத் தற்போது தேசிய கல்வி நிறுவகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் போதுமனாவர்கள் அல்ல என்பதுடன், அதற்காக, அரச பாடசாலைகளில் ஆசிரியர் சேவையிலுள்ள, குறிப்பிட்ட பாடவிதானங்களுடன் தொடர்புடைய, தேர்ச்சியுடன் கூடிய அனுபவம் வாய்ந்த – 150 ஆசிரியர்களை தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடடத்தக்கது.

Related posts: