வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை சுகாதார அமைச்சு தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி சேவையில் இணையும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளத்தை 75,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது வைத்தியர் ஒருவரின் முதல் சம்பளம் சுமார் 54,000 ரூபாவாகும்.

நீண்ட காலமாக தீர்க்கப்படாத சம்பளம் மற்றும் தொழில்சார் பிரச்சனைகள் காரணமாக வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து சுகாதார அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

000

Related posts:

தொற்று குணமாகி இரு வாரங்களின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே பயனுடையது - பிரதி சுகாதார பணிப்...
எரிபொருள் விநியோகத்தில் யாழில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை – தவறான பொறிமுறையால் எரிபொருள் நிரப்பு ந...
உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பிலான அறிவிப்பு விரைவில் - பிரதமர் தினேஷ் குணவர்தன த...