அமைச்சர்கள் இலவசமாக பயணிக்க முடியாது !

Saturday, October 8th, 2016

விமானப் படையின் விமானங்கள் மற்றும் ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்திய இரண்டு அமைச்சுக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நிதி அமைச்சு மற்றும் சுற்றுலா, கிருஸ்தவ மத விவகாரம் ஆகிய அமைச்சுக்கள் 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை இவ்வாறு செலுத்த வேண்டியுள்ளதாகவும், இவர்கள் இரு வாரங்களுக்குள் இதனை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.அத்துடன், நேற்று விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தியவர்கள் தொடர்பான பட்டியலை பாராளுமன்றத்தில் வெளியிட்டதை அடுத்து, சில ஊடகங்கள் அமைச்சர்கள் விமானங்களை பயன்படுத்த கட்டணங்கள் செலுத்த அவசியமில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமானப்படையின் வளங்களை துஷ்பிரயோகம் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட சில விமானப் பயணங்களுக்கு இதுவரை கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட விமானப் பயணங்களுக்காக 9 இலட்சம் ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளமையும் அடங்குவதான அமைச்சர் ருவன் விஜேவர்த்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

397287503Untitled-1

Related posts: