அமைச்சரவையை ஸ்தாபிப்பதில் குழப்பம்!

Monday, December 17th, 2018

பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமிப்பதில் கால தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்த பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக இருந்தது.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உள்ளிட்ட 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.

இதனால், அவர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவது தொடர்பாக, முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 இற்கும் மேலாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய 30 அமைச்சர்களை மாத்திரமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: