அமைச்சரவையில் அதிரடி மாற்றம் – சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல – ரமேஷ் பத்திரனவிற்கு கைத்தொழில் அமைச்சுடன் சுகாதார அமைச்சுப் பதவி – புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்!
Monday, October 23rd, 2023
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ் பத்திரனவிற்கு கைத்தொழில் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு நிதி இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!
கட்டட நிர்மாணத்தொழிற்துறையில் ஏற்படும் பின்னடைவைத் தவிர்க்க ஜனாதிபதியிடம் 13 முன்மொழிவுகள் - நகர அபி...
பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் கொண்ட மாகாணமாக உருவாகின்றது வடக்கு - அதன் மையமாக பூ...
|
|
|


