அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவிப்பு!
Saturday, February 19th, 2022
அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேநேரம்’ அமைச்சுக்களின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்புக்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அமைச்சர்களே அவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சில அமைச்சுக்களில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது போது ஜனாதிபதி அவர்களை எச்சரிக்கைகும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் இடையிலான முரண்பாடும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவின் பதவி விலகல் வரை சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


