அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் நகலைக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்!
Wednesday, September 13th, 2023
அண்மையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் நகலைக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த ஆவணம் மார்ச் 17, 2023 அன்று அரசாங்க அரசிதழில் முன்னர் வெளியிடப்பட்ட மசோதாவின் திருத்தப்பட்ட பதிப்பு என்பதை புரிந்து கொண்டதாக மனித உரிமை ஆணைக்குழு கூறியுள்ளது.
திருத்தப்பட்ட சட்டமூலத்தின் நகல் கிடைத்தவுடன் அது தொடர்பான மேலதிக அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அக் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். போதனாவில் மீண்டும் “பாஸ்” நடைமுறை!
கொரோனா தொடர்பில் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆவத...
தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரி...
|
|
|


