அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (22) மேலும் வலுவடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்’ளது
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312 ரூபா 61 சதமாகவும், விற்பனை பெறுமதி 330 ரூபா 16 சதமாகவும்
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்த போதிலும், கடந்த வாரம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் முதல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மீண்டும் வலுவடைய ஆரம்பித்துள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 84 சதமாகவும், விற்பனை பெறுமதி 334 ரூபா 93 சதமாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீள் மதிப்பீடு செய்ய கால அவகாசம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் - போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்ந...
27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் - நீதியமைச்சர் விஜயத...
|
|