அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நேற்று, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 184.89 ரூபாவாகவும், விற்பனை விலை 189.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று நோயான கோவிட் -19 காரணமாக, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த ஏப்ரல் 8ம் திகதி 200 ரூபாவை தாண்டியது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் பல நாடுகளின் நாணயங்கள் மதிப்பிழந்தன. இதன்படி, இலங்கையில் மார்ச் 20ம் திகதி முதல் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 190 ரூபாவை தாண்டியுள்ளது.
ஜனவரி 1 முதல் மே 6 வரை, இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 3.9 வீதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிபொருட்கள் மீட்பு!
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்ததால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும...
|
|