அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றுகின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
Sunday, September 3rd, 2023
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில்; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல் எனனும் தொனிப் பொருளின் கீழ் ஐக்கிய நாடுகள் சபை இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் 2030ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலின் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், அமைதியை நோக்கி நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் மற்றும் உலக காலநிலை மாற்றம் தொடர்பிலான விவகாரங்களுடன் மனிதவுரிமை விவகாரங்கள் பிரதானமாக கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


