அமெரிக்காவிற்கு ஜனாதிபதி விஜயம்!
Monday, August 15th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மாதம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ஆம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
கடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆடம்பரமற்ற முறையில் எளிமையாக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் பரிவாரங்களுடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்திற்கான விஜயம் இடம்பெறுவது வழமையாகக் காணப்பட்டது.
Related posts:
கொலை வழக்கு தொடர்பிலான விபரங்களை முன்கூட்டியே கசிவு!
அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டோரது தேசிய அமைப்பு!
வழிகாட்டத் தெரியாதவர்கள் தாமாகவே விலகிச் செல்ல வேண்டும் - ஊடக சந்திப்பில் ஈ.பி.டி.பி கருத்து!
|
|
|


