அமெரிக்காவின் 45 ஆவது அதிபரானார் டிரம்ப்!
Wednesday, November 9th, 2016
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் செய்திகள் வெளியாகியுள்ளன.
பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது.
ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது.

Related posts:
ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களையும் தயாரிக அமெரிக்க ராணுவம் ஆராய்வு!
துருக்கிப் பிரஜைகள் ஜெர்மனியில் உளவு பார்க்கப்படுவதனை ஏற்க முடியாது!
ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
|
|
|


