அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிகின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
Saturday, December 17th, 2016
அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிகின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாயை செலுத்தியுள்ளார்.
சுவாமியார் வீதி, கொழும்புத்துறை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.
அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிக் ஈ.பி.ஆர். எல்.எவ். அமைப்பைச் சேர்ந்த ஜசீர் லோயிஷன் அவர்களின் தந்தையார் என்பதுடன் டக்ளஸ் தேவானந்தாவின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Related posts:
தேவையான நிவாரணங்களை வழங்க அவசர பிரிவு – வெளிவிவகார அமைச்சு!
தேசிய வளங்களை விற்று வாழ வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது - இராஜாங்க அமைச்சர் உறுதி!
உலகின் முக்கிய சில நாடுகளின் தூதுவர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்!
|
|
|


