அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை !

காலஞ்சென்ற அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
கலட்டி – யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம்சென்ற கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ஆகியோர் மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
இதனிடையே காலஞ்சென்ற சிங்ஸிலி செல்வக்குமார் பாரம்பரிய இடதுசாரி கட்சியின் உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர ஆதரவாளருமாவார் என்பது குறிப்பிடத் தக்கது.
Related posts:
எவரேனும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தால் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்கை பதிவு செய்ய முடியு...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை - கல்வி அமைச்சர் தெரிவி...
பதவி விலக மாட்டேன் - அடம்பிடிக்கும் சம்பந்தன் – தலைமை பதவியால் கூட்டமைப்புக்குள் வெடித்தது பூகம்பம்!
|
|