அமரர் அருணாசலம் சந்திரசேகரத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
Friday, August 19th, 2016
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கரவெட்டி பிரதேசசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அருணாசலம் சந்திரசேகரத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் தமது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இன்றைய தினம் பாரதி வீதி. கம்பர்மலை, உடுப்பிட்டியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயரற்றிருக்கம் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
சில மாதகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் சந்திரசேகரம் நேற்றையதினம்(18) காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.








Related posts:
மக்களது தேவை எதுவோ அதை பெற்றுக் கொடுப்பவர்களாகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சி இருந்து வருகின்றது - ஈ.பி.டி....
இலங்கைக்கு பென்ஸ் அம்புலன்ஸ் வண்டிகள்!
யாழ்ப்பாணத்திற்கான 'யாழ் நிலா' சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பம்!
|
|
|


