அபுதாபி – கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை விரைவில் – அபுதாபியின் ஏர் அரேபியா விமான சேவை நிறுசனம் அறிவிப்பு!

Wednesday, September 6th, 2023

அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அபுதாபியின் ஏர் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது.

அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் குறைந்த கட்டணத்தில் முன்னெடுக்கப்படும் இந்த விமான சேவை, அடுத்த வருடம் ஜனவரி 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏர் அரேபியா நிறுவனம் அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான வாராந்தம் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

அதன்படி, புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கும், திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கட்டுநாயக்கவிலிருந்து அபுதாபிக்கும் விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், ஏர் அரேபியா தமது சேவையை விஸ்தரிக்கும் 34 ஆவது பயண இலக்காக கட்டுநாயக்க அமைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...
நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - முழுமையான ஆதரவை வ...

அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் மீண்டும் ஒரு முடக்க நிலையை...
அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் - 20-25 பேர் கொண்ட அமைச்சரவ...
ஆண்டு இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்கைளை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் - ஜனாதிபதியின் பணிக்கு...