அபிவிருத்தி திட்டங்களுக்கு சுற்றறிக்கைகள் இடையூறாக இருக்குமாயின் சுற்றறிக்கைகளை உடனடியாக திருத்துங்கள் – ஜனாதிபதி வலியுறுத்து!

அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, சுற்றறிக்கைகள் இடையூறாக இருக்குமாயின், அந்த சுற்றறிக்கைகளை உடனடியாக திருத்துமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்திய முதலீட்டு ஒத்துழைப்புடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மற்றும் உத்தேச திட்டங்களின் முன்னேறங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் அபிவிருத்திக்கு தடையாக இருக்குமாயின் அவற்றை, உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
000
Related posts:
சட்டவிரோதமாக வெளிநாட்டில் பணில் ஈடுபடுவோர் தொடர்பில் பணியகம் பொறுப்புக் கூறாதிருப்பதற்கான தீர்மானம்!
சமூக மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் - அரசாங்க மருத்துவர்கள் விடுத்துள்ள அபாய எச்சர...
இந்தியாவில் இருந்து அமுல் பால் மாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை - இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு ப...
|
|