அபிவிருத்தி உதவியாளர்களாக 20 ஆயிரம் பட்டதாரிகள் இணத்துக்கொள்ளப்படடுவர் – பிரதமர்!
Monday, August 21st, 2017
அபிவிருத்தி உதவியாளர்களாக 20 ஆயிரம் பட்டதாரிகள் இணத்துக்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் என்னைச் சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். இதுதொடர்பாக கல்வி அமைச்சருடன் பேசி கிழக்கு மாகாணத்தில் 1700 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் பிரதமர் கூறினார். மட்டக்களப்பு ஏறாவூரில் 96 மில்லியன் செலவில் நிருமானிக்கப்பட்ட நகர சபையின் புதிய கட்டடத்தை நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொழில் இல்லாத பட்டதாரிகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இவர்கள் பல ஆர்பாட்டங்களைச் செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உதவியாளர்களாக நியமிக்க தீர்மானித்தோம். இவர்கள் பிரதேசத்தின் வருமானம், கைதொழில், பெண்களின் நடவடிக்கைகள் உட்பட பலபணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கு முதலில் பயிற்சிகள் வழங்கப்படும். அதனையடுத்து பொறுப்புக்கள் வழங்கப்படும். தற்போதைய தேசிய வருமானம் முன்னைய ஆட்சிக்காலத்’தில் பெறப்பட்ட கடனுக்கான வட்டியை செலுத்துவதற்குக்கூட போதாமல் உள்ளது.இதனால் இவர்களை இணைத்துக்கொள்ள சற்று காலதாமதம் எடுத்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


