அபாய நிலையை நோக்கி இலங்கை – எச்சரிக்கிறார் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர்!
Saturday, July 20th, 2019
கடன் முகாமைத்துவ விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்பரால் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீட்க முடியாத அளவிற்கு நாடு அபாய நிலைமையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு பாரிய கடன் பொறியில் சிக்குவதனை தவிர்க்க முடியாது.
கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடன் முகாமைத்துவத்தை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வு!
இலங்கையில் புதியவகை வீரியம்கூடிய கொரோனா அடையாளம் - துரித நடவடிக்கையில் சுகாதார பிரிவு!
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் - கல்வி அமைச்சின் செயலா...
|
|
|


