அபராத தொகையை செலுத்த முடியாது சிறையிலுள்ள கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடிக்கை – சிறைச்சாலைத் திணைக்களம் அறிவிப்பு!
Saturday, January 9th, 2021
பல்வேறு குற்றச் செயல்களில் கைதாகி நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அபராத தொகையை செலுத்த முடியாதவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கைதிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறைச்சாலைத் திணைக்களம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறது.
இந்தநிலையில் ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் சிறு குற்றங்களை செய்து சிறையிலுள்ள பலர் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட வருகின்றனர்
இந்நிலையிலேயே மேற்குறித்த கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் விடுதலை
கிரிக்கெட் சபையிடமிருந்த ஆவணங்கள் கையேற்பு - சிறப்பு பொலிஸ்!
செயன்முறை பரீட்சைகளில் பங்குக்கொள்ள முடியாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் அறிவி...
|
|
|


