அபராதத் தொகைத் திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, December 7th, 2023
தண்டனைச் சட்ட கோவையின் அபராதத் தொகைத் திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடும் போது, விதிக்கப்படும் அபராதத் தொகை குறைவாக உள்ளதால் தண்டனை சட்ட கோவையை திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.
அதன்படி, புதிய சட்டமூலத்துக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவுடன், தண்டனை சட்ட கோவை திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களும் உயர்வு!
சேவைக்கு திரும்பாதவர்களுக்கு பதிலாக புதியவர்கள்- பிரதி போக்குவரத்து அமைச்சர்!
வடக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்!
|
|
|


