அபராதத்தை அதிகரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு!
Wednesday, November 23rd, 2016
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தமது சங்கம் ஏனைய பஸ் சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள் மற்றும் பாடசாலை வேன் சங்கங்கள் உள்ளிட்ட குழுவினருடன் இன்று மாலை கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக, அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டென்லி பிரணாந்து குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் மட்டுமே, இவ்வாறு அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

Related posts:
முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்...
கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் அடிக்கல் நாட்டல்!
மார்ச் 20 ஆம் திகதியுடன் முடிவடையும் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் - அனைத்து உள்ளூராட்சி மன்றங...
|
|
|


