அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின்மானி : மின்சக்தி அமைச்சு !

Friday, February 3rd, 2017

 

இந்த வருடம் முதல் சகல வீடுகளிலும் ஸ்மார்ட் மீற்றர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக தொழிற்சாலை ஒன்று ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது, ஆனால் இதனை ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டது என கூட்டு எதிரணியினர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக மின்சக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த தொழிற்சாலை 2007 இல் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இங்கு முன்பு பாவிக்கப்பட்ட மின்மணியே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஸ்மார்ட் மின்மினியை உற்பத்தி செய்யும் நோக்கில் இந்த புதிய தொழிற்சாலைக்கு அமைச்சு கடந்த வருடம் ஜனவரியில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த தொழிற்சாலையில் இருந்து 10 இலட்சத்திற்கு மேலாக மின்மினிகளை உற்பத்தி செய்ய முடியும் எனவும், எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த வருடம் முதல் சகல வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின்மானியை மாற்றப்படும் குறிப்பாக இரண்டு வருடங்களில் லெகோ நிறுவங்கள் பகுதிகளிலும், மிகுதி 5 வருடங்களில் மின்சார சபை பிரதேசங்களிலும் மாற்றப்படும் என கூறினார்.

மேலும் குறித்த மின்மானி பொறுத்தப்படுவதால், பாவிக்கும் அளவிற்கு ஏற்றவகையில் கட்டணம் அறவிடப்படும், மின்மாணி வசிப்பவர்கள் தேவைப்பட மாட்டார்கள், கட்டணம் செலுத்தாவிடின் மின் இணைப்பு தன்னிச்சையாக துண்டிக்கப்படும், பணம் செலுத்தும் பட்சத்தில் மீண்டும் இணைப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

download15

Related posts: