அனைத்து வசதிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் – ஜனாதிபதி
Saturday, August 5th, 2017
ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி அவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக அதிபர், ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு ஒருபோதும் சம்பளத்துக்கு என மட்டுப்பட்டதல்ல என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.மேலும் அழகியல் துறையில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற மூன்று மாணவர்களுக்கு ஜனாதிபதி பரிசில் வழங்கினார்.
Related posts:
புதிய மருத்துவ பீடங்கள் அமைப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
கல்விக் கொள்கையில் மாற்றம் - எட்டாம் ஆண்டில் பரீட்சை நடாத்துவதே சாதகம் : ஜனாதிபதி!
இந்தியாவிலிருந்து 146 அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!
|
|
|


