அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியும் : அமைச்சர் மங்கள சமரவீர!
Thursday, August 9th, 2018
புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்புறக்கணிப்புக் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் அதன் வீதி அனுமதிப்பத்திரத்தை கருத்திற்கொள்ளாது சேவையில் ஈடுட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புகையிரத வேலை நிறுத்தம் நிறைவு பெறும் வரையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் எப்பொழுது வேண்டுமானாலும் ரயில்வே தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
வரிச் சலுகையை இழந்ததால் கடந்த காலத்தில் 37 ஆயிரம் கோடி இழப்பு!
எந்தவொரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்யும் சட்டத்தில் தலையிடப் போவதில்லை - ...
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மகிழ்ச்சியளிக்கின்றது - கிளி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவி...
|
|
|


