அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பமானி மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டம் – கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும!
Saturday, May 23rd, 2020
அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பமானி மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய, கால்களால் இயக்கக்கூடிய கைகழுவும் இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த செயற்பாடுகளுக்காக 630 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்த உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
துப்பாக்கிப் சூட்டில் வர்த்தகர் பலி!
யாழில் நிலைகொண்டுள்ள படைவீரர்களை மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாரத்ன நிர்வகிக்கிறார் - பிரதமர்!
தெற்காசியாவில் வாழ்க்கைத் தரத்தின் உயர் நகரமாக கொழும்பு தெரிவு!
|
|
|


