அனைத்து தேர்தல் மத்திய நிலையங்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்னர் தேர்தல் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட அனைத்து நிலையங்களையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் மத்திய நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட இடங்கள் இவ்வாறு கிருமி தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் முப்படையினரின் தலையீட்டில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலைகளினுள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|