2017 முதல் மருத்துவ பீட மாணவர்கள் அனைவருக்கும் மாகாபொல கொடுப்பனவு!

Friday, March 23rd, 2018

2017 நவம்பரிலிருந்து பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீட வகுப்புகளைத் தொடரும் அனைத்து மருத்துவ பீட மாணவர்களுக்கும் வழங்கப்படாதிருந்த  அனைத்து மாகாபொல கொடுப்பனவுகளும் வழங்கப்படும்மென அபிவிருத்தி உபாய மார்க்கங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது பற்றி அமைச்சரின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ள தகவலில் :

மருத்துவ பீட மாணவர்களுக்கு மாபொல பொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பற்றி அண்மையில் அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மாபொல நம்பிக்கை நிதியத்துடன் மேற் கொண்ட விசேட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 2017 நவம்பரிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து மாபொல கொடுப்பனவுகளையும் மருத்துவ  பீட மாணவர்களுக்கு மீண்டும் வழங்குவதற்கு மாகாபொல நம்பிக்கை நிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

இதற்கேற்ப 2017 நவம்பரிலிருந்து மருத்துவ பீட மாணவர்களுக்கும் விரைவில் அனைத்து மாபொல கொடுப்பணவுகளும் வழங்குவதற்கு மாபொல நம்பிக்கை நிதியம் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது இது பற்றி மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் சார்பில் இதன் பேச்சாளர் வசந்த அல்விஸ் பத்திரிகைகளுக்குத் தகவல் தெரிவிக்கையில்

அமைச்சர் மலிக் சமர விக்கிரமவுடன் பெற்றோர் சங்கம் மெற்கொண்ட சந்திப்பின் போது தகமையுள்ள அனைத்து மருத்துவ பீட மாணவர்களுக்கும் அவர்களின் ஜந்து வருட மருத்துவ பட்டதாரி நெறிகளுக்கான மாபொல கொடுப்பனவுகளையும் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்துள்ளார் இதற்கேற்ப அனைத்து 50 மாபொல தவணைக் கொடுப்பனவுகளையும் மருத்துவ பீட மாணவர்களுக்கு வழங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: