அனுமதியின்றி முக்கிய தீர்மானங்களை எடுக்கக் கூடாது  – கல்வி அமைச்சர் !

Friday, April 14th, 2017

எனது அனுமதியின்றி கல்வி அமைச்சின் சில முக்கிய தீர்மானங்களை எடுக்கக் கூடாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல் உள்ளிட்ட பத்து தீர்மானங்களுக்கு தமது அனுமதி அவசியம் என தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் அனைத்து செயலாளர்கள் மற்றும் மேலதிக செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் கல்வி அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

ஊடக அறிக்கைகளை வெளியிடுதல், சுற்று நிரூபம் வெளியிடுதல், பாடசாலை கட்டடங்கள், வேறு கல்வி உபகரணங்கள் வழங்குதல் போன்றன தொடர்பில் தமது பூரண அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

பாடசாலைகளில் ஆய்வுக் கூடங்களை அமைத்தல், கல்வி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடல் என்பனவும் தமது அனுமதியின்றி மேற்கொள்ளப்படக் கூடாது என தெரிவித்துள்ளார். அமைச்சின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில்

Related posts: